ஜொகூர் பாலோவில் போட்டியிடும் மருத்துவர் RUBAN ARUMUGAM!
- THINAGAREN SANGGAREN
- 23 Jun, 2026
ஜூன் 23,
ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு வேட்பாளர் அறிமுகத்தில் டி.ஏ.பியின் PALOH சட்டமன்றத்தில் மருத்துவர் RUBAN ARUMUGAM போட்டியிடுகிறார். ரஷ்யாவில் மருத்துவக் கல்வியை முடித்து 2018 முதல் குளுவாங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரானதாகவும் 2022 முதல் குளுவாங்கிலும் பாலோவிலும் சொந்த POLIKLINIK நடத்தி வருவதாகவும் RUBAN ARUMUGAM தெரிவித்தார்.
டி.ஏ.பியின் கடைநிலை தொண்டராக இருந்த தனக்கு பாலோ சட்டமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதற்குப் பக்காத்தான் தலைமைக்குத் தனது நன்றியை RUBAN ARUMUGAM தெரிவித்தார். 15% இந்திய வாக்காளர்களைக் கொண்ட பாலோ சட்டமன்றத்தில் கடந்த 2022 மாநிலச் சட்டமன்றத்தில் டி.ஏ.பியை ம.சீ.ச 3,176 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாலோ சட்டமன்றத்தில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48% மலாய் வாக்காளர்களும், 35% சீன வாக்காளர்களையும் கொண்டிருக்கும் பாலோ சட்டமன்றத்தில் ம.சீ.சவின் வேட்பாளர் போட்டியிடுவார் என பாரிசான் தலைமை முன்னதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



