ஜொகூர் தேர்தலில் பக்காத்தானின் 10 வாக்குறுதிகள்!
- Surendran Sumdraraj
- 03 Jul, 2026
ஜூலை 3,
ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பக்காத்தான் மட்டுமே அதன் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. பி.கே.ஆர், டி.ஏ.பி, அமானா கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று முதல் பக்காத்தானின் 10 முதன்மை வாக்குறுதிகளைப் பின்பற்றி பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்காத்தானின் பத்து தேர்தல் வாக்குறுதிகள்:
1.ஆண்டுக்கு 1 லட்சம்
ரிங்கிட் வரையிலான மருத்துவச் சுகாதாரத் திட்டம்
2.முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு RM8,000 வரையில் உதவித் திட்டம்
3. 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இளையோர்
மேம்பாட்டு உதவித் திட்டங்கள்.
4. 5 ஆண்டுகளில் 80 ஆயிரம்
புதிய வீடமைப்புத் திட்டங்கள்
5. 2030க்குள் விரைவு இணைய வசதி மற்றும் அனைத்து
பள்ளிகளுக்கான செயற்கை நுண்ணறிவு திட்டம் அமைக்கப்படும்
6. தொழில்முனைவோருக்கு 1
பில்லியன் ரிங்கிட் வரையிலான உதவித் திட்டம்
7. உள்நாட்டு விவசாய அபிவிருத்தி திட்டம் (டுரியான்,
அன்னாசி)
8. ஆக்கப்பூர்வத் தொழில்துறை விரிவாக்கத் திட்டம்
9. எல்லை தாண்டும் கால அளவை 50% குறைத்தல்
10. 250,000 உயர் ஊதிய வேலை வாய்ப்பை உறுவாக்கும் திட்டம்
இந்த வாக்குறுதிகள் ஒரு சாராருக்கு மட்டும் பயனளிக்கும் வகையில்
அமையாது இன, மத வேறுபாடின்றி அனைத்து ஜொகூர் வாழ்
மக்களும் பயன்பெற வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என வேட்பாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
ஜொகூரில் அமைந்துள்ள அனைத்து இடங்களையும் ஒரு சேர மேம்படச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இன்று நடைபெற்ற
வாக்குறுதி வெளியீட்டு நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரும், பி.கே.ஆர் உதவித் தலைவருமான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, ஜொகூர் மாநில அமானா கட்சித் தலைவர் காலிட் சாமாட், அமைச்சரும்
பி.கே.ஆர் உதவித் தலைவருமான சாங் லீ கான், ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவரும் துணையமைச்சருமான
தியோ நீ சிங், பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளரும்
துணை அமைச்சருமான புசியா சாலே, ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் கட்சியின்
தலைவர் DATUK SERI
ZALIHA MUSTAFA ஆகியோர் நம்பிக்கை
தெரிவித்தனர்.
இன்றைய சூழ்நிலையில் ஜொகூர் மாநிலத்தில் குறிப்பிட்ட சில இடங்கள்
மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. பிற இடங்கள் இன்னும் பிரமிக்கும் மேம்பாட்டை
அடையவில்லை. இந்தச் சட்டமன்ற தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான ஆட்சி ஜொகூரில்
அமைந்தால் இந்நிலை மாறி ஜொகூர் மாநிலம் முழுவதும் சமசீர் மேம்பாட்டுக்கான
வழிவகைகள் மேற்கொள்ளப்படுமென பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



