ஜொகூரில் பெர்சத்துவுடன் இணையும் பாஸ்!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 10,

ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்துவுடன் இணைந்து தேர்தலை எதிர்நோக்கவிருப்பதாகப் பாஸ் கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர் Datuk Dr Mahfodz Mohamed தெரிவித்தார். பெரிக்காத்தான் கூட்டணியிலிருக்கும் பெர்சத்துவுடன் பாஸ் கட்சியின் கூட்டணியை முறிப்பதாகப் பாஸ் கட்சியின் தலைவர்  Tan Sri Abdul Hadi Awang அறிவித்தாலும் ஜொகூரின் கள எதார்தத்தை உணர்ந்து ஜொகூரில் பெர்சத்துவும் பாஸ் கட்சியும் இணைந்து போட்டியிடவிருப்பதாக பாஸ் கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர் Datuk Dr Mahfodz Mohamed உறுதிப்படுத்தினார். 

ஜொகூரில் பாஸ் கட்சிக்கும் பெர்சத்து கட்சிக்கும் நல்ல உறவு உள்ளது, எங்கள் நட்பை நாங்கள் தொடரவே விரும்புகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் பாஸ் கட்சிக்கு ஆதரவாகப் பெர்சத்துவும்., பெர்சத்துவுக்கு ஆதரவாகப் பாஸ் கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வோம் என பாஸ் கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர் Datuk Dr Mahfodz Mohamed தெரிவித்தார். பாஸ் கட்சியும் பெர்சத்து கட்சியும் மீண்டும் இணைய வேண்டும் என தாம் தனிப்பட்ட முறையில் விரும்புவதாக பாஸ் கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர் Datuk Dr Mahfodz Mohamed தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *