ஜொகூர், நெகிரி செம்பிலான் அடுத்து பகாங்கில் ஆட்சி கலைப்பா?
- THINAGAREN SANGGAREN
- 06 Jun, 2026
ஜுன் 6,
Johor, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதை அடுத்து பகாங்கிலும் ஆட்சிக் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெகிரி செம்பிலானில் PAKATAN கூட்டணியும் BARISAN கூட்டணியும் இணைந்து அமைத்த ஆட்சி கலைக்கப்பட்டதும் பகாங்கிலும் PAKATAN கூட்டணியும் BARISAN கூட்டணியும் இணைந்து அமைத்திருக்கும் ஆட்சி கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அம்னோ உதவித் தலைவரும் பகாங் மாநில மந்திரி பெசாருமான DATUK SERI WAN ROSDY WAN ISMAIL தலைமையில் பகாங் மாநில அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களுடன் சிறப்புச் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பகாங்கில் PAKATAN கூட்டணியும் BARISAN கூட்டணியும் இணைந்து அமைத்திருக்கும் ஆட்சி நிலைத்திருக்கும் என தாம் நம்புவதாக அம்னோ உதவித் தலைவரும் பகாங் மாநில மந்திரி பெசாருமான DATUK SERI WAN ROSDY WAN ISMAIL நம்பிக்கை தெரிவித்துள்ளார். பகாங்கில் பாரிசான் 17 சட்டமன்றங்களையும் பக்கத்தான் 8 சட்டமன்றங்களையும் கொண்டிருக்கிறது. பக்கத்தானின் ஆதரவில் பாரிசான் பகாங்கில் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் பாரிசானுக்கு வழங்கிய ஆதரவைப் பக்கத்தான் மீட்டுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெகிரி செம்பிலானில் பக்காத்தானுக்கு வழங்கிய ஆதரவைப் பாரிசான் மீட்டுக்கொண்டது போல, பகாங்கில் பாரிசானுக்கு வழங்கிய ஆதரவைப் PAKATAN மீட்டுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



