79 வேட்பாளர்களுடன் நடைபெறவிருக்கும் மலாக்கா தேர்தல் ஒரு கண்ணோட்டம்!
- THINAGAREN SANGGAREN
- 01 Nov, 2026
நவம்பர் 1,
மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி, பாரிசான் கூட்டணி பெரிக்காத்தான் கூட்டணி பெர்சாமா என 4 அரசியல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகிறது. நேற்று மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற நிலையில் 28 சட்டமன்றங்களில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பக்காத்தான் கூட்டணியில் பி.கே.ஆர், டி.ஏ.பி, அமனா கட்சிகளும் பெரிக்காத்தானின் பாஸ், கெராக்கான் கட்சிகளில் பாரிசானின் அம்னோ, ம.இ.கா, ம.சீ.ச கட்சிகளின் ஆதரவுடனும் பெர்சாமா தனித்தும் போட்டியிடுகிறது.
65 ஆண் வேட்பாளர்களும் 14 பெண் வேட்பாளர்களும் போட்டியிடும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் 24 சட்டமன்றங்களிலும் பாரிசான் 23 சட்டமன்றங்களிலும் பெர்சாமா 16 சட்டமன்றங்களிலும் பெர்சத்து 7 சட்டமன்றங்களிலும் பெரிக்காத்தான் 5 சட்டமன்றங்களிலும் புத்ரா 1 சட்டமன்றத்திலும் சுயேட்சை வேட்பாளர் 3 சட்டமன்றங்களிலும் என மொத்தம் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
11 சட்டமன்றங்களில் பக்காத்தான் கூட்டணி, பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியை நேருக்கு நேருக்காகச் சந்திக்கிறது. 11 சட்டமன்றங்களில் மும்முனை போட்டியும், 6 சட்டமன்றங்களில் நான்முனை போட்டியும் நிலவுகிறது. 10 நவம்பர் பாதுகாப்பு அதிகாரிகளும் 14 நவம்பர் பொதுமக்களும் வாக்களிப்பார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

