கண்ணியத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம்! – பி.கே.ஆர் உதவித் தலைவர் Datuk Seri Dr Zaliha Mustafa உறுதி!

top-news

நவம்பர் 1,

தேர்தலில் கட்சிகளுக்கிடையிலான விவாதங்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என பி.கே.ஆர் உதவித் தலைவர் Datuk Seri Dr Zaliha Mustafa கேட்டுக்கொண்டார். பக்காத்தான் வேட்பாளர்கள் பொறுமையாகவும் முறையான அணுகுமுறையுடனும் பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள் என Datuk Seri Dr Zaliha Mustafa உறுதியளித்தார். நம்மை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் கண்ணியத்தை மீறி நம் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் உணர்ச்சிவசப்படமால் பொறுமையாக எதிர்நோக்க வேண்டும் என Datuk Seri Dr Zaliha Mustafa கேட்டுக்கொண்டார். 

மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பக்காத்தான் கட்சித் தொண்டர்கள் கண்ணியத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சமயங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். பக்காத்தான் தலைமையிலான தேர்தல் வாக்குறுதிகள் பக்காத்தான் தேர்தல் குழு தலைவர் Datuk Seri Amirudin Shari தலைமையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் வேட்பாளர்களின் தனிப்பட்ட வாக்குறுதிகளும் மிகுந்த கவனத்துடன் வழங்கப்பட வேண்டும் என பி.கே.ஆர் உதவித் தலைவரான Datuk Seri Dr Zaliha Mustafa கேட்டுக்கொண்டார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்