மலாக்கா பாரிசானுடையது! - ZAHID HAMIDI சூளுரை!
- THINAGAREN SANGGAREN
- 24 Oct, 2026
அக்டோபர் 24,
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் தற்போதைய முதலமைச்சர் Datuk Seri Abdul Rauf Yusoh மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான Datuk Seri Ahmad Zahid Hamidi உறுதியளித்தார். பாரிசான் 21 சட்டமன்றங்களில் போட்டியிடும் நிலையில் நமது தொகுதிகளை நாம் தக்க வைக்க வேண்டும் என பாரிசான் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi வேட்பாளருக்கு நினைவூட்டினார்.
மலாக்கா மாநில பாரிசான் தலைவராக Datuk Seri Abdul Rauf Yusoh உங்கள் அனைவர் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். நான் நினைத்தாலும் அந்த நம்பிக்கையைத் தகர்க்க முடியாது என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். இந்த மலாக்கா பாரிசானுடையது என்பதை மீண்டும் நாம் நிரூபிக்க வேண்டும். இந்த மலாக்காவில் பாரிசான் மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதில் Datuk Seri Abdul Rauf Yusoh தலைமையிலான மலாக்கா மாநில பாரிசான் உறுதியாக இருப்பதாக Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

