21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுன் பக்காத்தான்!

top-news

அக்தோபர் 25,

மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் மட்டுமே பக்காத்தான் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. PKR 9 சட்டமன்றங்களிலும் டி.ஏ.பி 7 சட்டமன்றங்களிலும் அமானா 5 சட்டமன்றங்களிலும் போட்டியிடுகிறது. 

Ayer Limau, Lendu, Taboh Naning, Sungai Udang, Pantai Kundor, Duyong, Bemban ஆகிய தொகுதிகளில் பக்காத்தான் போட்டியிடவில்லை. கடந்த 2021 மலாக்கா மாநிலத் தேர்தலில் AYER LIMAU, TABOH NANING, PANTAI KUNDOR  சட்டமன்றங்களில் அமானா கட்சியும் LENDU, SUNGAI UDANG சட்டமன்றங்களில் பி.கே.ஆர் கட்சியும் DUYONG, BEMBAN சட்டமன்றங்களில் டி.ஏ.பி கட்சியும் போட்டியிட்டனர். எதிர்வரும் நவம்பர் 14 நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் இந்த 7 சட்டமன்றங்களில் பக்காத்தான் போட்டியிடாததற்குக் காரணங்கள் இருப்பதாகவும் பக்காத்தான் தலைமை தெரிவித்துள்ளது. 

பாரிசான் கூட்டணிக் கடந்த 2021 மலாக்கா சட்டமன்றத் தேர்தலின் போது அம்னோ 20 சட்டமன்றங்களிலும் ம.சீ.ச 7 சட்டமன்றங்களிலும் ம.இ.கா 1 சட்டமன்றத்திலும் போட்டியிட்டது. ஆனால் 2026 தற்போது நடைபெறும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் அம்னோ 18 சட்டமன்றங்களிலும் ம.சீ.ச 2 சட்டமன்றங்களிலும் ம.இ.கா அதே 1 சட்டமன்றத்திலும் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் ம.இ.காவின் GADEK சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற சண்முகத்திற்குப் பதிலாக நடராஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்