என் சொந்த ஊர் JERAM PADANG! – BERSATU வேட்பாளர் SANJEEVAN சூளுரை!
- THINAGAREN SANGGAREN
- 19 Jul, 2026
ஜுலை 19,
பெர்சத்துவின் மலாய் அல்லாதவர் பிரிவின் தலைவரான Sri Sanjeevan தனது சொந்த ஊரான JERAM PADANG சட்டமன்றத்தில் போட்டியிடுவதால் தாம் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார். அரசு சாரா பொது இயக்கங்களின் மூலம் சமூக ஆரவளராக அறியப்பட்ட Sri Sanjeevan பெர்சத்து வழங்கியிருக்கும் இந்த ஜெராம் பாடாங் வேட்பாளர் வாய்ப்பை முறையாகப் பயன்படுத்துவேன் என தெரிவித்தார். நான் நேற்று அரசியலுக்கு வந்து இன்று வேட்பாளராகவில்லை. 15 ஆண்டுகள் சமூகச் சேவையில் இருந்து வருகிறேன். 2019 முதல் பெர்சத்துவில் என்னை நான் இணைத்துக்கொண்டு, இப்போது பெர்சத்துவின் நம்பிக்கையான வேட்பாளராக இருக்கிறேன் என Sri Sanjeevan தெரிவித்தார்.
ஜெராம் பாடாங் மாவட்டத்தில் தேர்தலுக்கு முன்னமே சமூகச் சேவைகளை மேற்கொண்டு வருகிறேன். தேர்தலுக்காக மட்டும் இந்த பகுதிக்கு நான் வரவில்லை. இது என்னுடைய சொந்த ஊர் என Sri Sanjeevan தெரிவித்தார். என்னை எதிர்த்து போட்டியிடும் பாரிசான் பக்காத்தான் வேட்பாளர்கள் மிக பெரிய படை பலத்துடன் ஆரவாரத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ளலாம், ஆனால் பொது மக்கள் இந்த ஆரவாரத்தைக் கண்டு மயங்குவதில்லை. அவர்களுடைய சோதனையான காலத்தில் அவர்களுடன் இருந்தவர்களை அவர்கள் அங்கீகரிப்பார்கள் என Sri Sanjeevan தெரிவித்தார்.

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



