20 ஆண்டுகள் அரசியல்! ஜெராம் பாடாங்கில் வெற்றி உறுதி! – Manivannan நம்பிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 19 Jul, 2026
ஜூலை 19,
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆரின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினரான Manivannan Gowindasamy, என் தாயாரின்
மண்ணின் மக்களுக்காக ஜெராம் பாடாங் சட்டமன்றத்தில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய 20 ஆண்டுகள் அரசியல் அனுபவமும் தனக்கு வெற்றியைப் பெற்று தரும் என Manivannan
Gowindasamy தெரிவித்தார். பி.கே.ஆரின் கட்சியின்
அரசியல் செயலாளர் பொறுப்பிலிருக்கும் Manivannan Gowindasamy ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும் கல்விக்கூடங்களை
மேம்படுத்துவதையும் அவசியமானத் தேவையாக இருப்பதால், நிச்சயம்
இந்த உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பதாக வாக்குறுதி அளித்தார்.
ம.இ.காவின் பாரம்பரியத் தொகுதியான Jeram Padang சட்டமன்றத்தைக் கடந்த
2022 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது ம.இ.கா அம்னோவுக்கு விட்டுக்கொடுத்தது. தற்போது நடைபெறும்
சட்டமன்றத் தேர்தலில் Jeram Padang தொகுதியில் பக்காத்தான் வேட்பாளர்
Manivannan Gowindasamy, பாரிசான் வேட்பாளர் ZAIDY
ABDUL KADIR, பெர்சத்து வேட்பாளர் SANJEEVAN, பூர்வக்குடியினக்
கட்சியின் வேட்பாளர் Dayana Dal ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
16,332 வாக்காளர்களைக் கொண்ட JERAM PADANG சட்டமன்றத்தில் சுமார் 5,400 க்கும் மேல் இந்திய வாக்காளர்கள்
உள்ளனர். இரண்டாவது மிக பெரிய வாக்காளர் சமூகமாக இந்தியர்கள் திகழ்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



