நெகிரி செம்பிலான் தேர்தலில் இத்தனை வேட்பாளர்களா? உடையும் கூட்டணிகள்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 19,

நெகிரி செம்பிலான் தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்ற நிலையில் 36 சட்டமன்றங்களில் 103 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பக்காத்தான் கூட்டணியில் பி.கே.ஆர் 14 சட்டமன்றங்களிலும், டி.ஏ.பி 11 சட்டமன்றங்களிலும், அமானா 11 சட்டமன்றங்களிலும் என பக்கத்தான் கூட்டணி அனைத்து 36 சட்டமன்றங்களிலும் போட்டியிடுகிறது.

பாரிசான் கூட்டணியில் அம்னோ 16 சட்டமன்றங்களிலும், ம.சீ.ச 7 சட்டமன்றங்களிலும், ம.இ.கா 2 என மொத்தம் 25 சட்டமன்றங்களில் மட்டுமே போட்டியிடுவதாகவும் எஞ்சிய 11 சட்டமன்றங்களில் பெரிக்காத்தானின் வேட்பாளர்களை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது.

பெரிக்காத்தான் கூட்டணியில் பாஸ் கட்சி 5 சட்டமன்றங்களிலும், எதிர்கட்சித் தலைவரான HAMZAH ZAINUDDIN-இன் WAWASAN கட்சி 4 சட்டமன்றங்களிலும், கெராக்கான் , MIPP ஆகிய கட்சிகள் தலா ஒரு சட்டமன்றத்திலும் என பெரிக்காத்தான் மொத்தம் 11 சட்டமன்றங்களில் போட்டியிடுவதாகவும் எஞ்சிய 25 சட்டமன்றங்களில் பாரிசான் வேட்பாளர்களை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெரிக்காத்தானின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெர்சத்துவின் தலைவர் TAN SRI MUHYIDDIN தலைமையிலான பெர்சத்து, பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் உரிமை கட்சியுடன் கூட்டணி அமைத்து 24 சட்டமன்றங்களில் போட்டியிடுகின்றனர். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட உரிமை கட்சி 2 சட்டமன்றங்களிலும் பெர்சத்து 22 சட்டமன்றங்களிலும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே PSM கட்சி 1 சட்டமன்றத்திலும் பூர்வக் குடியினக் கட்சி 1 சட்டமன்றத்திலும் போட்டியிடுகின்றனர். அவர்களுடன் 4 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

36 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் 103 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *