பக்காத்தானுக்கு வாக்களிக்க RM300 – RM 500 வரையில் லஞ்சமா? – காவல்துறை விளக்கம்!
- THINAGAREN SANGGAREN
- 28 Jul, 2026
ஜூலை 28,
இன்று நெகிரி செம்பிலான மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் முன்களப் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக WAWASAN கட்சியின் Badrul Hisham Shaharin வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார். புனைக் கதைகளையோ, ஊகங்களையோ அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது என Datuk Alzafny Ahmad தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் காவல்துறை, லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் Datuk Alzafny Ahmad தெரிவித்தார். இன்று காலை தொடங்கி முன்களப் பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டம் கட்டமாக வாக்குகளைச் செலுத்தி வரும் நிலையில் பெர்சத்துவிலிருந்து விலகி, WAWASAN கட்சியில் இணைந்த Chegubard எனும் Badrul Hisham Shaharin பக்காத்தான் கட்சியினர் ஒரு வாக்குக்குத் தலா RM300 ரிங்கிட் முதல் RM 500 வரையில் லஞ்சம் கொடுப்பதாகவும் வாக்குச் சாவடியில் உள்ள பெயர்பட்டியலை வெளியிடவும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



