அரசாங்கத்திலிருந்து பாரிசான் வெளியேற வேண்டும்! பக்காத்தான் வலியுறுத்து!
- THINAGAREN SANGGAREN
- 19 Jul, 2026
ஜூலை 19,
பக்காத்தானுடன் பாரிசான் ஆட்சியில் பங்காளிகளாக இருந்து கொண்டே தேர்தலின் போது எதிர்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பாரிசான், அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்ததியது. குறிப்பாக அமைச்சர்கள் துணை அமைச்சர்களாக அரசின் உயரிய பொறுப்பிலிருக்கும் பாரிசான் கட்சியினர் ராஜினாமா செய்ய வேண்டும் என பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தியது. அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருங்கள். ஆட்சியிலும் இருந்து கொண்டு எதிர்கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பது துரோகத்தின் உச்சம் என பக்காத்தான் இளைஞர் பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசானும் பெரிக்காத்தானும் இணைந்து போட்டியிடுவதற்கு, இந்த ஜொகூர் மாநிலத் தேர்தலையும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலையும் ஒத்திகைக்காகப் பாரிசான் பயன்படுத்துகிறது. பாரிசானுக்கும் பெரிக்காத்தானுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து பாரிசான் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி பெரிக்காத்தானுடன் பாரிசான் உறவில் இருக்க விரும்பினால் அரசாங்கத்திலிருந்து பாரிசான் உடனடியாக வெளியேற வேண்டும் என பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



