மலாய் மக்களின் நலனை முன்னிறுத்துவோம்; பிற இன உரிமைகள் பாதுகாக்கப்படும் – அக்மால்

top-news
FREE WEBSITE AD

போர்ட் டிக்சன், ஜூலை 27-

மலாய் மக்களின் நலன் மற்றும் உரிமைகளைத் தொடர்ந்து முன்னிறுத்துவதில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் இளைஞர் பிரிவுகள் இணைந்து செயல்பட உறுதியளித்துள்ளன. அதேவேளையில், மலாய் அல்லாத சமூகங்களின் உரிமைகளை எவ்விதத்திலும் பறிக்கவோ, ஒடுக்கவோ மாட்டோம் என்றும் அம்னோ இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலே தெரிவித்தார்.

இரு கட்சிகளின் இளைஞர் அணிகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்குச் சான்றாக, கோத்தா சட்டமன்றத் தொகுதியிலிருந்து லிங்கி சட்டமன்றத் தொகுதி வரை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் அணிவகுப்பில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

“மலாய் மக்களின் நலனைப் பற்றி பேசுவது, பிற இன மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக அல்ல. மாறாக, அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு,” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *