வெற்றியைப் போல தோல்வியையும் ஏற்போம்! நூருல் இசா!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 30,

பி.கே.ஆர் கட்சி சபா மாநிலங்கவைச் சட்டமன்றத் தேர்தலில் சந்தித்திருக்கும் தோல்விக்குப் பொறுப்பேற்பதாகப் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் NURUL IZZAH ANWAR தெரிவித்துள்ளார். வளமான பி.கே.ஆர் கட்சிக்குத் தேர்தலில் வெற்றிகளை மட்டுமே பரிசாக அளித்த மக்கள் தற்போது தோல்வியைப் பாடமாக அளித்துள்ளார்கள் என்றாலும் பி.கே.ஆர் கட்சி முழுமையாக அந்த பாடத்தை ஏற்பதாக NURUL IZZAH ANWAR தெரிவித்தார். சபாவில் பி.கே.ஆர் கட்சி மேலும் நம்பிக்கையை விதைக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருப்பதாகவும் களத்தில் மக்களுடன் பி.கே.ஆர் கட்சி இருக்கும் என்றும் NURUL IZZAH ANWAR தெரிவித்தார். 

இந்த பயணம் முடியவில்லை, வெற்றியின் ருசியை அறிந்த பி.கே.ஆர் தற்போது தோல்வியின் கசப்பையும் அறியும் காலமாக இதைக் கருதுவதாக NURUL IZZAH ANWAR தெரிவித்தார். மேலும் வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படியும் தொடர்ந்து சபாவில் பி.கே.ஆர் கட்சி வலுப்பெற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகச் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவரும் சபா மாநிலத் தேர்தல் வியூகக் குழு தலைவருமான NURUL IZZAH ANWAR தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *