வட மாநில இந்திய இளைஞர்களுக்கான “மலேசியா மடானி தேசியத்துவப் பயிற்சி"
- Surendran Sumdraraj
- 17 Mar, 2026
தி.கிரிஷன்
மலேசிய இந்தியர் இளைஞர் மன்றமும் மலேசிய தேசியத்துவக் கழகமும் (Akademi Kenegaraan Malaysia) இணைந்து “மலேசியா மடானி தேசியத்துவப் பயிற்சியும் இந்திய இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல் முகாமினை வட மாநில இந்திய இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மூன்று நாள் “KEM GENRLS 2.0” பெயரில் நடைபெற்ற இம்முகாமானது கெடா கூலிம் தேசியத்துவப் பயிற்சி மையயத்தில் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களில் உள்ள உயர்கல்விக் கூடங்கள், ஆசிரியர் கல்விக் கழகங்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் என மொத்தம் 94 பேர் இம்முகாமில் பங்கேற்றனர்.
இந்திய இளைஞர்களை இதுபோன்ற தேசியத்துவப் பயிற்சி முகாமில் ஈடுபடுத்துவது பெரும் சவாலாக இருப்பதால் இந்தச் சவாலை ஒரு வாய்ப்பாக ஏற்றுக்கொண்ட மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் இந்தத் திட்டத்தை மலேசியத் தேசியத்துவ கழகத்தினருடன் இணைந்து முழுமையாக முன்னெடுத்து நடத்தியது என மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத் தலைவர் தனேஷ் பாசில் தமதுரையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் கடந்த வருடம் 720 இந்திய இளைஞர்கள் வருகைபுரிந்ததாகவும் இவ்வருடம் 930 இந்திய இளைஞர்களுக்கு மலேசியத் தேசியத்துவ கழகத்தினாரால் வாய்ப்பு திறக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த திரு பிரவின் ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. முகாமின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து, இளைஞர்களின் தலைமைத்துவ வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தின் இலக்குகள் சிறப்பாக நிறைவேறுமாறு அவர் திறம்பட வழிநடத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



