தேர்தலில் பி.கே.ஆர் வேட்பாளர்கள் கவனம்! அன்வார் எச்சரிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 08 Apr, 2026
ஏப்ரல் 8,
ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் மாநாட்டில் பிரதமரும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான அன்வார் மாவட்ட அளவில் பி.கே.ஆர் கட்சிக்குப் பலம் இல்லை என்றால் வேட்பாளர்களை நிறுத்தமாட்டேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். எந்த சட்டமன்றத்தில் பி.கே.ஆர் கட்சி போட்டியிட விருப்பம் கொண்டாலும் அந்த சட்டமன்றத்தில் பி.கே.ஆரை விடவும் கூட்டணிக் கட்சிகள் பலமாகவும் மக்கள் ஆதரவுடனும் இருந்தால் பி.கே.ஆர் வேட்பாளரை நிறுத்துவதில் பயனில்லை என அன்வார் வெளிப்படையாக அறிவித்தார்.
முன்னதாக ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் தலைவரான DATUK SERI ZALIHA MUSTAFA மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆர் 28 சட்டமன்றங்களில் போட்டியிடும் என அறிவித்திருந்தார். கடந்த 2022 நடைபெற்ற ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆர் கட்சி 20 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 1 சட்டமன்றத்தில் மட்டுமே வெற்றிப் பெற்றிருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான டி.ஏ.பி 14 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 10 சட்டமன்றங்களில் வெற்றிப் பெற்றிருந்தது. மற்றொரு கூட்டணிக் கட்சியான அமானா 16 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 1 சட்டமன்றத்தில் மட்டுமே வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



