சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: 5-4 என பரபரப்பான வெற்றி பெற்ற பிஎஸ்ஜி
- Surendran Sumdraraj
- 29 Apr, 2026
பாரிஸில் நடைபெற்ற UEFA Champions League அரையிறுதி முதல் கட்டப் போட்டியில் Paris Saint-Germain அணி, Bayern Munich அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் அரையிறுதி வரலாற்றில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட போட்டியாகப் பதிவாகியுள்ளது.
பிஎஸ்ஜி அணிக்காக Khvicha Kvaratskhelia மற்றும் Ousmane Dembele தலா 2 கோல்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.
போட்டி தொடங்கியவுடன் Harry Kane பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பாயர்ன் முன்நிலை பெற்றது. ஆனால் அதற்கு பதிலடியாக க்வாரட்ஸ்கெலியா சமநிலை கோல் அடித்தார். பின்னர் Joao Neves பிஎஸ்ஜியை முன்னிலையில் கொண்டு வந்தார்.
இதற்கு பின் Michael Olise கோல் அடித்து 2-2 என சமநிலையை ஏற்படுத்தினார். முதல் பாதி நிறைவுக்கு முன், கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டியை டெம்பேலே வெற்றிகரமாக மாற்றி, பிஎஸ்ஜிக்கு மீண்டும் முன்னிலை பெற்றுத்தந்தார்.
மொத்தத்தில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி சிறிய முன்னிலை பெற்று, அடுத்த வாரம் Allianz Arena மைதானத்தில் நடைபெறும் இரண்டாம் கட்டப் போட்டிக்குத் தயாராகியுள்ளது.
இந்த வெற்றியால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பிஎஸ்ஜி அதிகரித்துள்ள நிலையில், திரும்பப்போட்டியில் மேலும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



