லமின் யமாலை வாங்க PSG தயாரா?
- Surendran Sumdraraj
- 24 Mar, 2026
பாரிஸ், மார்ச் 24-
பிரான்ஸ் கால்பந்து கிளப் பாரிஸ் செயின்ட்-ஜெர்மேன் (PSG), பார்சிலோனா இளம் நட்சத்திரம் லமின் யமாலை வாங்க சுமார் 350 மில்லியன் (1.8 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான சலுகையை முன்வைக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோடைக்கால மாற்றுச் சந்தையில் இந்த ஒப்பந்தம் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
UEFA சாம்பியன்ஸ் லீக் 2024-2025 சீசனில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, புதிய திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் PSG, யமாலை அணியின் முக்கிய தூணாக மாற்ற நினைக்கிறது. அவரது திறமை மற்றும் இளம் வயதிலேயே காட்டிய நிலைத்தன்மை, PSG-க்கு பெரிய முதலீடாக கருதப்படுகிறது.
பார்சிலோனாவின் புகழ்பெற்ற லா மாசியா அகாடமியில் உருவான யமால், 2023 ஏப்ரலில் ரியல் பெட்டிஸ் அணிக்கு எதிராக 15 வயதிலேயே முதல் அணியில் அறிமுகமானார். அதன் பின்னர், ஸாவி ஹெர்னாண்டஸ் மற்றும் ஹான்சி பிளிக் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது 18 வயதாகும் யமால், 155 போட்டிகளில் 46 கோல்கள் மற்றும் 50 உதவி கோல்கள் பதிவு செய்து, உலக கால்பந்தில் மிக முக்கியமான இளம் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



