தலைநகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 47 பெண்கள் உட்பட 99 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 07 Mar, 2025
மார்ச் 7,
தலைநகரின் புடு பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 47 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட மொத்தம் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார். தலைநகர் புடு பகுதியில் கேளிக்கை மையத்தில் பாலியல் தொழில் நடப்பதாகப் புகார் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட கேளிக்கை மையத்தின் மேலாளர் என நம்பப்படும் 2 உள்ளூர் ஆடவர்களும் 10 Bangladesh பணியாளர்களும் 19 முதல் 45 வயதுடைய 47 வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்த்திற்கு RM100 முதல் RM1,000 வரையில் பாலியல் சேவைகள் வழங்குவதாகவும் கேளிக்கை மையத்தில் மொத்தம் 145 பார்வையாளர்களிடம் சோதனையை மேற்கொண்டதில் 31 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.. இன்று அதிகாலை 1 மணிக்குத் தொடங்கிய சோதனை காலை 7 மணி வரைக்கு நிறைவடைந்ததாக அவர் தெரிவித்தார்.
Polis menahan 99 individu dalam serbuan Op Noda di premis hiburan Pudu, termasuk 47 wanita warga asing disyaki GRO. Ujian urin mendapati 31 positif dadah. Siasatan dijalankan atas kesalahan imigresen dan salah guna pas lawatan sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *