பினாங்கில் 2 கேளிக்கை மையங்களை மூடிய MBPP!

top-news

பிப்ரவரி 16,

பினாங்கில் சட்டவிரோதமாக இயங்கி வந்து 2 பொழுது போக்கு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் உரிமம் இல்லாமல் கேளிக்கை மையத்தை நடத்தியது கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட 2 பொழுதுபோக்கு மையத்தையும் பினாங்கு நகராண்மைக்கழகம் மூடியது. சம்மந்தப்பட்ட 2 பொழுதுபோக்கு மையத்தில் அதிகாலை 1 மணிக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொழுதுபோக்கு மையத்திற்கான உரிமம் இல்லாமல் கேளிக்கை மையம் நடத்தியது, சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ளாத உணவுகளை வணிகம் செய்தது, நேரக்கட்டுப்பாடு இல்லாமல் கேளிக்கை மையத்தை நடத்தியது என பல்வேறு விதிமீறல்களைச் சம்மந்தப்பட்ட 2 கேளிக்கை மையங்களும் புரிந்திருப்பதாக MBPP தெரிவித்துள்ளது.

Majlis Bandaraya Pulau Pinang (MBPP) menutup dua pusat hiburan yang beroperasi secara haram. Serbuan dilakukan pada jam 1 pagi mendapati premis tidak memiliki lesen, menjual makanan tanpa pemeriksaan kesihatan dan beroperasi tanpa kawalan masa. Barang di premis turut dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *