PUSPAKOM அலுவலகத்தில் JPJ சோதனை!

- Sangeetha K Loganathan
- 31 Dec, 2024
டிசம்பர் 31,
வாகன ஆய்வு மையமான PUSPAKOM லாரிகளையும் கனரக வாகனங்களையும் முறையாகச் சோதிப்பதில்லை எனும் புகாரின் அடிப்படையில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் வாகன ஆய்வு மையங்களைச் சோதனை நடத்தினர்.
முன்னதாக வெளிநாட்டினரின் பெயரில் லாரிக்கு உரிமம் வழங்கியது சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் Datuk Jana Santhiran Muniayan தெரிவித்தார்.
லாரிகளைச் சோதனையிடுவதில் எந்தவொரு மெத்தனப்போக்கையும் கொண்டிருக்க வேண்டாம் என்றும், முழுமையானச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அறிந்து சோதனைகளை மேற்கொள்ளும்படி PUSPAKOM அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் Datuk Jana Santhiran Muniayan வலியுறுத்தினார்.
JPJ menjalankan pemeriksaan ke atas PUSPAKOM selepas aduan mengenai pemeriksaan tidak teliti terhadap lori dan kenderaan berat. Susulan isu pemberian lesen lori kepada warga asing, JPJ menekankan keperluan pemeriksaan lebih teliti dan berintegriti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *