கோலலங்காட்டில் வெள்ளம் பெருகும் இடங்களில் ஸ்குவாட் பந்தாஸ்-முகமட் ஹஸ்ரி!
- Muthu Kumar
- 11 Dec, 2024
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், டிச.11-
கோல லங்காட் மாவட்ட ரீதியில் மக்கள் குடியிருப்புகளில் தாழ்வான பகுதிகளில் கடுமையான மழை காரணமாக வெள்ளம் பெருகும் அபாயம் இருப்பதைத் தொடர்ந்து ஸ்குவாட் பந்தாஸ் அவசர நடவடிக்கைக் குழுவினர் அங்கு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் தெரிவித்தார்.
மெட் மலேசியா வானிலை மையம் அறிவிப்புப்படி இவ்வாரத்தில் கனத்த மழை பெய்யும் சாத்தியம் இருப்பதால் இவ்வட்டாரத்தில் வழக்கமாக வெள்ளம் பெருகியோடும் தாழ்வான இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கனத்த மழையின் காரணமாக வெள்ளம் பெருகும் இடங்களில் வசிப்போர் தங்களது முக்கிய ஆவணங்கள் உடைமைகளை பாதுகாப்பான இடங்களில் முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளும்படி முகமட் ஹஸ்ரி தெரிவித்தார்.
அதே வேளையில், கிராமப் புறங்களில் இருப்போர் மழைக் காலங்களில் வெள்ளம் பெருகும் இடங்களில் அல்லது கால்வாய் களில் நோய்கள் பரவக் கூடும் என்பதால் தங்களது பிள்ளைகளை நீரில் விளையாட வோ குளிக்கவோ அனுமதிக்க வேண்டாம் என்று அவர் ஆலோசனை கூறினார். அவசர ஆபத்து நேரங்களில் பொதுமக்கள் நகராண்மைக் கழகத்தின் ஸ்குவாட் பந்தாஸ் அவசர நடவடிக்கைக் குழுவினரின் உதவியை நாடும்படி முகமட் ஹஸ்ரி கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



