எதிர்க்கட்சியினருக்கு சமமான நிதி ஒதுக்கீடு-மகஜரில் மாற்றம் செய்ய முடியும்!

top-news
FREE WEBSITE AD

சைபர்ஜெயா, மார்ச் 11-

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான அளவில் நிதிஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நகல் கருத்திணக்கக் குறிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைப்பதுபோன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.ஆகவே, அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி பேச்சு நடத்த முன்வரவேண்டும் என்று 66 சைபர்ஜெயாவில் "ஹாசில் டே 2025 எனும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வேளையில், அப்போதைய பிரதமருடன் பல தடவை பேச்சு நடத்தியிருக்கிறேன் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

“எனவே, முதலில் பேச்சு நடத்துவோம். நகல் மகஜரில் நாம் மாற்றம் செய்துகொள்ள முடியும். இதனை எதற்காகப் பெரிதுபடுத்திப் பேச வேண்டும்? தெருவோர வீரர்களாக மாற அவர்கள் விரும்புகின்றனரா? என்று எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசினை அவர் சாடினார்.

அந்த நகல் கருத்திணக்கக் குறிப்பை நிராகரிக்க பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தகுந்த காரணங்கள் உள்ளன என்று முஹிடின் முன்னதாகக் கூறியிருந்தார்.அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகள் மிகக் கடுமையானதாகவும் நியாயமற்றதாகவும் உள்ளன என்று முஹிடின் கூறினார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் கிடைக்காமல் திணறிக் கொண்டிருகின்றனர் என்று கூறப்படுவதையும் அன்வார் நேற்று நிராகரித்தார்.

அலவன்ஸுகள் அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? முப்பதாயிரம் வெள்ளி முதல் நாற்பதயிரம் வெள்ளி வரை அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. எனவே, அவர்களிடம் பணம் இல்லை என்று கூறமுடியாது என்றார் அன்வார்.

எதிர்க்கட்சிகளின் வசமுள்ள தொகுதிகளில் திட்டங்கள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் உள்ள வேறுபாடு என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் அல்லாது நேரடியாக அத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் என்று அன்வார் சுட்டிக் காட்டினார்.

அத்திட்டங்களை நிறைவேற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்காற்ற முடியும். ஆகவே, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று பிரதமர் விளக்கினார்.

Perdana Menteri Anwar Ibrahim menggesa pembangkang berbincang mengenai peruntukan kewangan sama rata untuk semua Ahli Parlimen. Beliau menolak dakwaan pembangkang kekurangan dana, menjelaskan projek di kawasan mereka tetap dilaksanakan secara langsung tanpa melalui wakil rakyat pembangkang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *