ரபீசி ரொம்ப பேசுகிறார்! அவரை இடைநீக்கம் செய்ய அன்வாருக்குப் பயம்!
- Thinagaren Sanggaren
- 16 Feb, 2026
பிப்ரவரி 16,
பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli வாய்க்கு வந்ததைப் பேசி ஆட்சிக்கும் அவர் சார்ந்த பி.கே.ஆர் கட்சிக்கும் எதிரானக் கருத்துகளைப் பரப்பி வருகிறார் என்றாலும் அன்வார் அமைதியாகவே இருக்கிறார் என்றால் அன்வாருக்கு ரபீசியைக் கண்டு பயம் இருக்கிறது என பொருள்படுவதாக அம்னோவின் பத்து தொகுதித் தலைவர் Gulam Muszaffar தெரிவித்துள்ளார்.
அன்வார் இப்போது பிரதமராக இருந்தாலும் அவருடைய கட்சி உறுப்பினர்கள் எல்லையை மீறி நடந்துக்கொள்ளும் போது அவர் அமைதியாக இருக்கிறார். இது துணிச்சலற்ற தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது என Gulam Muszaffar சாடினார். Razifi, Nik Nazmi Nik Ahmad, Wong Chen, Rodziah Ismail என பி.கே.ஆரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் TAN SRI AZAM BAKI-க்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அசாம் பாக்கியைத் தலைமை இயக்குநராக நியமித்தது அன்வார். அப்படியானால் Razifi, Nik Nazmi Nik Ahmad, Wong Chen, Rodziah Ismail ஆகிய பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை எதிர்க்கிறார்கள் என Gulam Muszaffar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



