தெருவுக்கு வந்து போராடுவேன்! – RAFIZI RAMLI எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 15,

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் TAN SRI AZAM BAKI மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் காலத் தாமதம் செய்தால் மீண்டும் தெருவுக்கு வந்து போராடுவேன் என பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவரும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Rafizi Ramli எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊழலைத் தடுக்கும் பொறுப்பில் இருக்கும் தலைமை இயக்குநர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் பல்வேறு ஆதாரங்கள் இருந்தாலும் அரசாங்கம் அவரைப் பதவியில் வைத்து அழகு பார்க்கிறது என Datuk Seri Rafizi Ramli சாடினார்.

ஊழலை எதிர்த்து அரசியல் செய்த கட்சியின் ஆட்சியில் அசாம் பாக்கி பாதுகாக்கப்படுவது கவலைக்குரியது என்றும் எதிர்வரும் ஏப்ரல் 21 அசாம் பாக்கியைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகரில் பேரணியை நடத்தவிருப்பதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். இந்த போரணி அமைதியாக நடக்க வேண்டும் என தாம் விரும்புவதால் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் அடையாளங்களை ஒதுக்கி வைத்து விட்டு பேரணியில் பங்கேற்க வேண்டும் என Datuk Seri Rafizi Ramli வலியுறுத்தினார். இளைஞர் ஊழலுக்கு எதிரானப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்பதால் இளைஞர் இயக்கங்களும் இப்பேரணிக்கு ஆதரவளித்துள்ளதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *