ரபீஸிக்கு எதிராகக் களமிறங்கும் கைரி? அம்னோ வலியுறுத்து!
- THINAGAREN SANGGAREN
- 13 Apr, 2026
ஏப்ரல் 13,
பண்டான் நாடாளுமன்றத்தில் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramliக்கு எதிராக அம்னோவின் Khairy Jamaluddin ¬¬வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என பண்டான் நாடாளுமன்ற அன்மோ தலைவர் Syed Rosli Jamallulai அம்னோ தலைமைக்கு வலியுறுத்தியுள்ளார். பண்டான் நாடாளுமன்றத்தின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரபீஸிக்கு அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருவதால் அடுத்த பொதுத்தேர்தலில் மீண்டும் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என்றாலும் பண்டான் நாடாளுமன்றத்தில் கைரி ஜமாலுடினைத் தவிர மற்ற வேட்பாளர்களைப் பண்டான் தொகுதி அம்னோ ஆதரிக்காது என Syed Rosli Jamallulai தெரிவித்தார்.
முன்னதாகப் பண்டானின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான Datuk Seri Rafizi Ramli கட்சி தன்னை வேட்பாளராக அறிவிக்காவிட்டாலும் சுயேட்சையாகப் போட்டியிடவும் தயார் என தெரிவித்திருந்தார். தற்போதைய நிலவரப்படி அடுத்த பொதுத் தேர்தலில் பண்டான் நாடாளுமன்றத்தில் பி.கே.ஆர் வேட்பாளராக அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆரில் இணைந்த முன்னாள் அமைச்சர் Datuk Seri Tengku Zafrul Abdul Aziz அறிவிக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் என்ன நடந்தாலும் நான் பண்டான் நாடாளுமன்றத்தைக் கைவிடமாட்டேன் என பொருளாதார முன்னாள் அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



