RM8.5 மில்லியன் கொடுத்து கட்சி கைப்பற்றினேனா? - “அது முழுக்க முழுக்க பொய்” - ரபிசி ரம்லி விளக்கம்
- Surendran Sumdraraj
- 28 May, 2026
கோலாலம்பூர், மே 28-
BERSAMA கட்சியை அதன் நிறுவனர் Tan Gin Theam-இடமிருந்து RM8.5 மில்லியன் கொடுத்து கைப்பற்றியதாகப் பரவி வரும் குற்றச்சாட்டை முன்னாள் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Rafizi Ramli மறுத்துள்ளார்.
சமூக வலைதளமான X-ல் வெளியிட்ட பதிவில், கட்சியின் பொறுப்பேற்பு எந்தவித பண பரிவர்த்தனையும் இன்றி நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டுகள் “சைபர் படையினரால்” திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு எனவும் அவர் சாடியுள்ளார்.
“கவலைப்பட வேண்டாம். இதை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம். ஒரு நாள் இதற்கான பதிலை அவர்கள் பெறுவார்கள்,” என்று ரபிசி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “Gin Theam இந்த கட்சியை எங்களிடம் ஒப்படைத்தபோது கண்கலங்கினார். அது பணத்திற்காக நடந்த ஒன்று அல்ல,” என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் PKR துணைத் தலைவரான Nik Nazmi Nik Ahmad உடனும் இணைந்து கட்சியை பொறுப்பேற்றதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



