ரபீஸியை எதிர்த்து ரமணனை ஆதரிக்கும் அம்னோ!
- THINAGAREN SANGGAREN
- 08 Apr, 2026
ஏப்ரல் 8,
முன்னாள் பொருளாதார அமைச்சர் DATUK SERI RAFIZI RAMLIக்கும் மனிதவள அமைச்சர் DATUK SERI RAMANANக்கும் இடையிலான கருத்து முரண்களும் வாக்குவாதங்களும் உட்கட்சி விவகாரம் என்றாலும் ரபீசி அமைச்சராக இருந்த போது RM750 மில்லியன் மதிப்பிலானத் திட்டம் தோல்வி அடைந்ததாகவும் அது மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதால் தேசிய தனிக்கைக் குழு அந்த நிதி என்ன ஆகியது என்பதை விசாரிக்க வேண்டும் என அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநில சபாநாயகருமான DATO DR PUAD ZARKASHI வலியுறுத்தினார்.
பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவர் ரபீஸிக்கும் தற்போதை பி.கே.ஆரின் உதவித் தலைவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதை நான் ஆராயவில்லை. ஆனால் ரபிஸி அமைச்சராக இருந்த போது 750 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான VENDING MACHINE திட்டம் என்னவானது என்பதைக் கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது என PUAD ZARKASHI தெரிவித்தார். ரபீஸி தோல்வி அடைந்த அமைச்சர் என அடையாளப்படுத்த இந்த 750 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான VENDING MACHINE திட்டத்தைக் குறிப்பிடலாம் என புவாட் சர்காஷி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



