கர்ணனாக களமிறங்கும் ராகவா லாரன்ஸ் – வைரலாகும் ‘மஹாவீர் கர்ணா’ பர்ஸ்ட் லுக்

top-news
FREE WEBSITE AD

சென்னை: நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், புராணக் கதாபாத்திரமான கர்ணனாக நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

தற்போது ‘காஞ்சனா 4’ மற்றும் ‘பென்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், போர்வீரர் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் இடம்பெற்றுள்ளார். போஸ்டர் வெளியானதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. படம் அடுத்த ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *