தேசிய ஊதிய நிர்ணயக் குழுவின் (MPGN) துணைத் தலைவராக ராஜேஸ்வரி கருப்பையா நியமனம்!

- Sangeetha K Loganathan
- 13 Feb, 2025
பிப்ரவரி 13,
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஊதிய நிர்ணயக் கவுன்சிலான MPGN கவுன்சிலின் துணைத் தலைவராக Rajeswari Karupiah நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கானத் துணைத் தலைவர் நியமனத்தை மனிதவள அமைச்சர் Steven Sim இன்று அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
வேலை வாய்ப்புகள், பெருநிறுவனச் சட்டம், தொழில்துறை மேம்பாடுகளில் தொழிலாளர்கள் பங்களிப்புகள் தொடர்பானத் துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கும் Rajeswari Karupiah அவர்களின் மேல்பார்வையில் தொழில்துறை உறவுகள், கொள்கை உருவாக்கம், பெருநிறுவன நிர்வாகத்துடன் தொழிலாளர் ஊதியங்களின் கொள்கை வரைவுகள் மேமபடுத்தப்படும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
K. Rajeswari dilantik sebagai Timbalan Pengerusi MPGN. Berpengalaman lebih 30 tahun dalam undang-undang perhubungan industri dan beliau pernah berkhidmat di Bank Dunia dan membantu dalam dasar gaji minimum Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *