சூரியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 15 –

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சூரியை தொலைபேசியில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன் பின்னர் ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்துள்ளது.

எல்ரட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *