தேர்தலில் பெற்ற ஆணை வெறும் ஆதரவின் அடையாமல்ல-சபா சட்டமன்ற துணை சபாநாயகர்
- Tamil Malar (Reporter)
- 16 Dec, 2025
கோத்தா கினபாலு, டிச. 16-
மக்கள் கார்டினியா ரொட்டியை விரும்பவில்லை, உயர்தர வாழ்க்கையை எதிர்பார்க்கிறார்கள் என்று சபா மாநில சட்டமன்றத்தின் (DUN) துணை சபாநாயகர் டத்துக் அல் ஹம்ப்ரா ஜுஹார் இன்று கூறினார். அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் (ADUN) மக்களின் எதிர்பார்ப்பை முழு பொறுப்புணர்வு, நேர்மை, பொது நலனை மையப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
கடந்த தேர்தலில் பெற்ற ஆணை வெறும் ஆதரவின் அடையாளம் மட்டுமல்ல, ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தங்கள் தொகுதிகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் என அவர் வலியுறுத்தினார்.
புதிய, பழைய ADUNக்களிடம் மக்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் என்று கூறிய அவர், மாநில வளர்ச்சியின் திசையை தீர்மானிப்பதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது என சுட்டிக்காட்டினார்.
"உங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் நிலையை உயர்த்துவது உங்களின் பொறுப்பு. அனைவரும் பணக்காரர்களாக முடியாது என்று சிலர் கூறலாம், ஆனால் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை வாழ உரிமை உண்டு" என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



