RAMANAN மீது நீதிமன்ற வழக்கு! RAFIZI அறிக்கை!

top-news

அக்டோபர் 24,

மனிதவள அமைச்சர் Datuk Seri Ramanan தன் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர விருப்பதாக பொருளாதார முன்னாள் அமைச்சர் Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். நான் ரமணன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன். அது பொய்யான குற்றச்சாட்டு என்றால் ரமணன் என் மீது புகார் அளிக்கட்டும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கட்டும்.


ஆனால் இதை எதையுமே செய்யாமல் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை ரமணன் சுமத்துவதால் ரமனனுக்கு எதிராக நான் வழக்கு தொடுக்கிறேன் என PKR முன்னாள் துணைத் தலைவரான Rafizi Ramli தெரிவித்துள்ளார். தவறு செய்யாதவர் ஏன் நீதிமன்றத்தை அணுகாமல் அமைதியாக இருக்க வேண்டும்? என Rafizi Ramli கேள்வி எழுப்பினார். ரமணன் லஞ்சம் வாங்கினார் என நான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளேன். அதை மறுக்கும் ரமணன் ஆதாரப்பூர்வமாகவும் , முறையான விசாரணையின் மூலமாகவும் நிரூபிக்கட்டும் என Rafizi தெரிவித்தார். 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்