நம் தலைவிதியைக் கல்வி மட்டுமே மாற்றும்! அமைச்சர் ரமணன் நினைவூட்டல்!
- Thinagaren Sanggaren
- 18 Jan, 2026
ஜனவரி 18
நம் தலைவிதியை மாற்ற முடியாது என்றாலும் நம் குழந்தைகளின் தலைவிதியை மாற்றூவதற்கு ஒரே வழி அவர்களுக்கு முழுமையாகக் கல்வியை வழங்குவது என மனிதவள அமைச்சரான Datuk Seri Ramanan தெரிவித்தார். நேற்று தனது சங்கை பூலோ நாடாளுமன்றத்தில் உள்ள 1,000 மாணவர்களுக்கு RM 150 ரிங்கிட் ரொக்க நன்கொடையும் 250 மாணவர்களுக்குக் கூடுதலாகப் பள்ளிப் பொருள்களையும் வழங்கினார். இந்த உதவி பெற்றோர்களின் சுமையை ஓரளவிற்குக் குறைக்கும் என தாம் நம்புவதாக Datuk Seri Ramanan தெரிவித்தார்.
பிரதமர் அன்வாரின் தலைமையிலான மடானி அரசு நம் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. வறுமையின் காரணமாகத் தனது சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் எந்தவொரு குழந்தையும் கல்வியைத் தொடர முடியாமல் இருக்க கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக Datuk Seri Ramanan தெரிவித்தார். குழந்தைகளே படியுங்கள். கடினமாகப் படியுங்கள். உங்களா தாய் தந்தையரின் வாழ்வாதாரத்தை உங்கள் கல்வி உயர்த்தும் என நம்புங்கள். இன்று வழங்கப்பட்டிருக்கும் புத்தகப் பைகளும், எழுதுபொருள்களும், சீருடைகளும் உங்கள் வறுமையைப் போக்கிடாது. உங்கள் கல்வியே உங்களை வறுமையிலிருந்து மீட்கும். அப்படியானக் கல்வியைத் தடையின்றி நீங்கள் பெறவே மடானி அரசு இது போன்ற உதவிகளைச் செய்கிறது என Datuk Seri Ramanan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



