RM1.56 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல்!

top-news

டிசம்பர் 6,

KLIA விமான நிலையத்தில் 31.9 கிலோ எடையிலான ketamine வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சுங்கத்துறை உதவி இயக்குநர் Norlela Ismail தெரிவித்தார். இது தொடர்பாகச் சம்மந்தப்பட்டுள்ள 2 உள்ளூர் ஆடவர்களையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 
கைது செய்யப்பட்ட இருவரும் இரு வெவ்வேறு போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM1.56 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாகச் சுங்கத்துறை உதவி இயக்குநர் Norlela Ismail தெரிவித்தார்.

Jabatan Kastam KLIA merampas 31.9kg ketamin bernilai RM1.56 juta dan menahan dua lelaki tempatan. Siasatan awal mendapati mereka dari dua sindiket dadah berbeza.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *