RM462,769 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!

top-news

டிசம்பர் 26,

தெமர்லோவில் நடத்தப்பட்ட சோதனையில் RM462,769 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பகாங் மாநிலச் சுங்கத் துறை தெரிவித்துள்ளது. சொகுசு வாகனத்தில் கடத்தல் பொருள்கள் கைமாற்றப்படுவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதாகவும் 380,800 கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பகாங் மாநிலச் சுங்கத்துறை (JKDM Pahang) இயக்குநர் Mohd Asri Seman தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் சம்மந்தப்பட்ட வாகனத்தைத் தேடியதாகவும் சாலை ஓரத்தில் ஆளில்லாமல் சம்மந்தப்பட்ட வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் ஜொகூரிலிருந்து இந்த கடத்தல் சிகரெட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு வாகனத்தின் அடையாள அட்டை எண் போலியானது என்றாலும் தகவலின் அடிப்படையில் சந்தேகநபரைத் தேடி வருவதாகப் பகாங் மாநிலச் சுங்கத்துறை (JKDM Pahang) இயக்குநர் Mohd Asri Seman தெரிவித்தார்.

JKDM Pahang merampas 380,800 rokok seludup bernilai RM462,769 di Temerloh. Rokok dipercayai dari Johor ditemukan dalam kereta mewah dengan nombor plat palsu. Siasatan lanjut sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *