ஈரான் அணி நியூசிலாந்துடன் 2-2 என சமநிலை

top-news
FREE WEBSITE AD

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 16 –

2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் ஜி’ பிரிவு முதல் ஆட்டத்தில், ஈரான் அணி இருமுறை பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு நியூசிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

ஆட்டம் தொடங்கிய 7-ஆவது நிமிடத்திலேயே நியூசிலாந்தின் எலிஜா ஜஸ்ட் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஈரான், 32-ஆவது நிமிடத்தில் ரமின் ரெசாயியன் அடித்த கோல் மூலம் ஆட்டத்தை 1-1 என சமநிலைப்படுத்தியது.

இரண்டாவது பாதியில் 54-ஆவது நிமிடத்தில் மீண்டும் எலிஜா ஜஸ்ட் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்து நியூசிலாந்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு சென்றார். இருப்பினும், 64-ஆவது நிமிடத்தில் முகமது மொஹெபி கோல் அடித்து ஈரானை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

போட்டியின் இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்கான கோலைப் பதிவு செய்ய தீவிரமாக முயற்சித்த போதிலும், கூடுதல் கோல்கள் எதுவும் பதிவாகவில்லை. இதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *