அமெரிக்காவுக்கு ஈரான் போட்ட அதிரடி நிபந்தனை!

top-news
FREE WEBSITE AD

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு தள்ளிவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஈரானிய உயர்மட்ட குழு பாகிஸ்தான் விரைந்துள்ளது.

ஆனால், அமெரிக்காவை இனி நம்ப முடியாது என்றும், ஏற்கனவே மூன்று முறை தங்களை நம்பவைத்து அமெரிக்கா ஏமாற்றிவிட்டதாகவும் ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், நேரடி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஒரு மிகக்கடுமையான நிபந்தனையை ஈரான் விதித்துள்ளது.

​பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளன. "அமெரிக்கா தனது வாக்குறுதியைக் காப்பாற்றும் என்பதற்கு இந்த நாடுகள் எழுத்துப்பூர்வமாகப் பாதுகாப்பு உத்தரவாதம் (Security Guarantee) அளிக்க வேண்டும்" என்பதே ஈரானின் அந்த அதிரடி நிபந்தனை.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடன் ஈரான் நடத்தவுள்ள இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் முடிவுதான், உலகப்போர் மூளுமா அல்லது அமைதி திரும்புமா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *