ஈரானின் அசுர வேகத்தில் பாயும் 'செஜில் 2' - அமெரிக்கா, இஸ்ரேல் அதிர்ச்சி!
- Muthu Kumar
- 17 Mar, 2026
"ஈரானின் வான் தாக்குதல் வலிமை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்த சில நாட்களிலேயே, ஈரான் தனது மிக சக்திவாய்ந்த 'செஜில் 2' {Sejjil-2} ஏவுகணையை ஏவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
பிப்ரவரி 28 முதல் தொடர்ந்து வரும் இந்தப் போரில், ஈரான் தனது 52-வது அலை தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த அதிநவீன ஏவுகணையை முதன்முறையாகப் பயன்படுத்தி உள்ளதாக ரஷ்யா டுடே {RT} செய்தி வெளியிட்டுள்ளது.
'அஷீரா' {Ashoura} என்றும் அழைக்கப்படும் இந்த ஏவுகணை, சுமார் 700 கிலோ எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து கொண்டு, 2,000 கிலோமீட்டர் தொலைவு வரை மிகத் துல்லியமாகப் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது. திட எரிபொருளைப் பயன்படுத்துவதால், இதை மிகக் குறுகிய காலத்தில் ஏவ முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளான 'ஐயன் டோம்' போன்றவற்றைத் துளைத்துச் செல்லும் 'ஆடும் ஏவுகணை' {Dancing Missile} என இது வர்ணிக்கப்படுகிறது. ட்ரம்ப்பின் கூற்றைப் பொய்யாக்கும் விதமாக, ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல் சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



