ஈரானே போரை நிறுத்து: இல்லையென்றால் விளைவுகள் பயங்கரமாகும் - சவூதி உள்ளிட்ட 6 அரபு நாடுகள் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் ஆவேசமான போக்கிற்கு எதிராக ஆறு அரபு நாடுகள் ஒன்றிணைந்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஈரானின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகச் சாடியுள்ளன. குறிப்பாக, ஈராக் மண்ணில் செயல்படும் ஈரான் ஆதரவுப் படைகள் மூலம் அண்டை நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பிராந்தியத்தின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்றும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ஈரான் மீறுவதாகவும் அந்த நாடுகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளன.

ஈரான் தனது Proxy Groups மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் முக்கியக் கட்டடங்களைக் குறிவைப்பதைத் உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா. சாசனத்தின் 51-வது பிரிவின் கீழ், தங்களின் பாதுகாப்பிற்காக எத்தகைய கடுமையான நடவடிக்கையையும் எடுக்கத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என அரபு நாடுகள் எச்சரித்துள்ளன. போரின் தொடக்கத்திலிருந்தே ஈரானுக்கு மறைமுக ஆதரவு இருப்பதாகக் கருதப்பட்ட சில அரபு நாடுகளே தற்போது போரை நிறுத்தச் சொல்லி ஈரானுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *