ஊழலால் நாடு ஏழையானது போது! அன்வார் காட்டம்!

top-news

நவம்பர் 1,

தொடர்ச்சியான ஊழலால் நாடு ஏழையானது போதும் என பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM காட்டமாகப் பதிலளித்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களான SARA நிதி உதவித் திட்டம், STR நிதி உதவித் திட்டம் ஆகியவற்றுக்கு 16,000 கோடி ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கியிருப்பதால், அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளிநாட்டுத் தனியார் ஊடகம் வெளியிட்ட செய்தியால் தாம் அதிருப்தி அடைந்திருப்பதாக DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார். நாட்டின் கடன் அதிகரிப்பதற்குக் காரணம் மக்கள் நலத்திட்டங்களால் அல்ல, நாட்டின் ஊழல்வாதிகளால் தான் என DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார். 

அரசாங்கத்தின் சொத்துகள் குறிப்பிட்ட ஒரு சில கும்பலால் சுரண்பட்டு வருவதால் நாட்டின் வருவாய் பாதிக்கப்படுகிறதே தவிர ஏழை மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் சிறிய நிதி உதவிகளால் அல்ல என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார். மடானி அரசு தனது நிதி மேலாண்மையையும் நல்லாட்சியையும் முறையாகப் பேணிக்கொண்டு, தேவைப்படுபவர்களுக்கு உதவும் தனது கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் என பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM உறுதியளித்தார். குறைந்த வருமானம் பெறும் மக்கள் அதே வருமானத்தில் இருக்க கூடாது என்பதற்காக சிறு தொழில்முனைவோருக்கான அரசாங்க நிதி உதவியை 200 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் தொழில்துறையில் ஈடுபடும் முதல் தலைமுறையினருக்கு இலவச அடிப்படை உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்