கல்வித் துறையில் ஊழல்! தீவிரமான நடவடிக்கை எடுப்போம்! உயர்கல்வி அமைச்சர் உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 08 Apr, 2026
ஏப்ரல் 8,
உயர்கல்விக் கூடங்களில் புதிய மாணவர் சேர்க்கையில் லஞ்சம் பெறுவதாக வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr. Zambry Abdul Kadir தெரிவித்தார். சிறியதாகவோ பெரியதாகவோ வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு முறையான கட்டண ரசீதுகளை வழங்காத கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உயர்கல்வி அமைச்சின் தனிக்கைக் குழு தயாராக இருப்பதாக Datuk Seri Dr. Zambry Abdul Kadir தெரிவித்தார்.
அரசு உயர்கல்விக் கூடங்களிலும் அதிகாரிகள் லஞ்சம் பெற்று மாணவர்களைத் தேர்வு செய்ய வாய்ப்புகள் இல்லை. எந்தவோர் அதிகாரியும் தனிப்பட்ட முறையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. இது முழுக்க முழுக்க மாணவர்களின் அடைவுநிலையை அடிப்படையாகக் கொண்டு இயங்கலையில் மாணவர்களைத் தேர்வு செய்து வருவதாக Datuk Seri Dr. Zambry Abdul Kadir தெரிவித்தார். அதையும் மீறி லஞ்சம் பெற முயற்சிக்கும் அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க உயர்கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பை வழங்கும் என உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr. Zambry Abdul Kadir உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



