தைரியமான இந்துவாக இருந்தால் ; வெளியே வா! ராயருக்குச் சவால்விட்ட Firdaus Wong!
- THINAGAREN SANGGAREN
- 29 Oct, 2026
அக்டோபர் , 29
நாடாளுமன்றத்தில் Firdaus Wong எனும் தனது பெயரை உச்சரிக்கும் Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN RAYER துணிச்சலான ஆம்பளையாக இருந்தால் வெளியே எனக்கு எதிராக பேசட்டும் என சர்ச்சைக்குரிய சமய போதகரான Firdaus Wong சவால்விட்டுள்ளார். தனது முகநூல் பதிவில் RSN ராயரைக் குறிப்பிட்டு தைரியமான இந்து என நம்பும் ராயர் தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய சமய போதகரான Firdaus Wong வெளிப்படையாக சவால் விட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் பேசும் ராயர் பொதுவெளியில் என்னுடைய பெயரை உச்சரிக்க முடியுமா என சர்ச்சைக்குரிய சமய போதகரான Firdaus Wong கேள்வி எழுப்பினார். உண்மையில் நாட்டின் ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது நானா அல்லது ராயரா எனும் தலைப்பிலேயே விவாதிக்கலாம் என சர்ச்சைக்குரிய சமய போதகரான Firdaus Wong வலியுறுத்தினார். இப்படியான ஒரு பொது விவாதத்தை ஒற்றுமை துறை அமைச்சு நடத்த வேண்டும் என நான் முன்னமே அமைச்சர்களுக்குக் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஒற்றுமை அமைச்சும் இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கிறது என Firdaus Wong குற்றம்சாட்டினார். ஆகையால் நானே இந்த விவாதத்தை நடத்துகிறேன்.Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN RAYER தைரியமான ஆண் மகனாக இருந்தால், துணிச்சலான இந்துவாக இருந்தால் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என சர்ச்சைக்குரிய சமய போதகரான Firdaus Wong சவால் விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

