ரியல் மாட்ரிடை வீழ்த்தியது கெடாப்பே அணி

top-news
FREE WEBSITE AD

மாட்ரிட்,மார்ச் 3-

கெடாப்பே அணியின் மார்டின் சத்ரியானோ அடித்த கண்கவர் கோல், ரியல் மாட்ரிட்டை  1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்த ஸ்பெயின் லா லிகா லீக் போட்டி சாண்டியாகோ பெர்னபேவ் மைதானத்தில் அதிகாலை நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து ரியல் மாட்ரிட் அணியே அதிக நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பல்வேறு கோல் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டபோதிலும், அவற்றை கோல்களாக மாற்ற முடியாமல் தவறிவிட்டது. பதற்றமான சூழலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

39ஆவது நிமிடத்தில், சரியாக வெளியேற்றப்படாத குறுக்குப் பாஸ் பந்து பெனால்டி பகுதியின் வெளியே விழுந்தது. அதனை மார்டின் சத்ரியானோ வலுவான வோலி அடியாக மாற்றி, கோல்காப்பாளரை வீழ்த்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *