இனவெறி குற்றச்சாட்டு விவகாரம் – UEFAக்கு ஆதாரங்கள் ஒப்படைத்தது ரியல் மாட்ரிட்

top-news

மாட்ரிட், பிப். 20-

போர்ச்சுகல் கிளப் பென்பிகாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் பிளேஆப் போட்டியின் போது ஏற்பட்டதாக கூறப்படும் இனவெறி குற்றச்சாட்டு தொடர்பாக, ரியல் மாட்ரிட் UEFAக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த போட்டியில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாம் பாதி தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்ததும், பென்பிகா அணியின் விங்கர் ஜியன்லூகா பிரெஸ்டியான்னி தன்னை நோக்கி இனவெறி வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார். இதன் காரணமாக போட்டி சுமார் 11 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பிரெஸ்டியான்னி இந்த குற்றச்சாட்டை மறுத்து, வினிசியஸ் தவறாக புரிந்துகொண்டதாக விளக்கம் அளித்தார். இதேவேளை, பென்பிகா கிளப்பும் தங்களின் வீரருக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட UEFA, ஒழுக்கம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளரை நியமித்து விசாரணையை தொடங்கியுள்ளது. “செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் இன்று UEFAக்கு ஒப்படைத்துள்ளோம்,” என்று ரியல் மாட்ரிட் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *