சபரிமலை செல்லும்வரை சாப்பாடு இலவசம்! கிள்ளான் VK Brother's உணவகத்தின் அன்னதானம்!

top-news

கிள்ளான், நவ 20:சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து, விரதம் இருந்து, கடுமையான ஆன்மிகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு, அவர்கள் விரதத்திற்கு ஏற்ற சைவ உணவைத் தேடிப் பெறுவது பல நேரங்களில் சவாலாக அமைந்துவிடுகிறது.

அத்தகைய சிரமம் ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓர் உன்னத அன்னதானப் பணியைச் செய்து வருகிறது கிள்ளானில் உள்ள VK Brothers உணவகம்.

மாலை அணிந்த பக்தர்களின் விரத நெறிக்கும், உணவு முறைக்கும் மதிப்பளித்து, தாங்களே தூய்மையான முறையில் சைவ உணவுகளைத் தயாரித்து, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர் இந்தச் சேவையாளர்கள்.

கடந்த நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த அன்னதானச் சேவை, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

தினமும் காலை உணவும், மதிய உணவும் இலவசமாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மதிய உணவு தொடர்ந்து தயாரித்து வழங்கப்படுகிறது.

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்தலாம்.

உணவை வழங்குவதோடு நின்றுவிடாமல், பக்தர்களின் விரத நெறியை மதித்து, தங்களின் நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து அவர்கள் செய்து வரும் இந்தத் தொண்டு உண்மையிலேயே பாராட்டுக்குரியது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்