நாடு முழுவதும் இலவச பள்ளி பேருந்து அவசியம்! - அரசுக்கு ம.இ.கா கோரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஜன 13: தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிலைநிறுத்த, நாடு முழுவதும் இலவச பள்ளி போக்குவரத்து சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என ம.இ.கா  வலியுறுத்தியுள்ளது.

இந்த கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு (Year One) மாணவர் சேர்க்கை 10,330 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 11,021 மாணவர்களுடன் ஒப்பிடுகையில் 691 மாணவர்கள் குறைவாகும்.

MIC தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா, இந்த திட்டத்தின் முழுச் செலவையும் அரசு ஏற்றுக்கொண்டால், பெற்றோரின் நிதிச்சுமை குறையும் என அவர் தெரிவித்தார்.

மேலும், பள்ளி விடுமுறை காலங்களில் வருமானம் குறையும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும் இந்த முயற்சி உதவியாக இருக்கும் என அவர் கூறினார்.

சராவாக் மாநில அரசு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் இலவச போக்குவரத்து வழங்கி வரும் முன்முயற்சியை சுட்டிக்காட்டிய முருகையா, அதேபோன்ற திட்டத்தை மத்திய அரசும் தற்போதுள்ள வசதிகள் மற்றும் சேவை வழங்குநர்களை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தலாம் என்றார்.

இலவச போக்குவரத்து வழங்கப்படுவதால், உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும், பெற்றோரின் மன அழுத்தம் தணியும், மேலும் பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பும் மேம்படும் என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *