விபத்தில் தலை துண்டாகி உயிரழந்த இளைஞர்!

top-news
FREE WEBSITE AD

மே 20,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த வேனை மோதி விபத்தை ஏற்படுத்தியதில் வேனிலிருந்த 18 வயது இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று நண்பகல் 3.40 மணிக்குக் கோலா திரங்காவிலிருந்து Taman Manir செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd. Noor தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர் 18 வயது Wah Han Keong என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் வேன் ஓட்டுநரும் விபத்தை ஏற்படுத்திய Volkswagen Golf GTI வாகனமோட்டியுடன் ஒரு வயது குழந்தையும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுப்பாட்டை இழந்த Volkswagen Golf GTI வாகனம், சாலையோர மின்கம்பத்தை மோதி, எதிரில் வந்த வேனில் மோதியதாகவும், மின்கம்பத்தில் மின்கம்பி இளைஞரின் தலையைத் துண்டித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd. Noor தெரிவித்தார். வேனிலிருந்த 8 வயது சிறுவன் மட்டும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *