TRELER லாரி மோதியதில் 15 வயது சிறுமி பலி!

- Sangeetha K Loganathan
- 15 Apr, 2025
ஏப்ரல் 15,
இன்று காலை 15 வயது சிறுமி ஓட்டி வந்த் மோட்டார் சைக்கிள் TRELER லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். உயிரிழந்தவர் 15 வயது Nurnie Alisya என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இன்று காலை 10.45 மணிக்கு ஆயேர் கெரோவிலிருந்து தங்காக் செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் Christopher Patit தெரிவித்தார்.
உயிரிழந்த 15 வயது சிறுமி TRELER லாரியை முந்திச் செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் லாரியில் டயர் சிறுமியின் மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைக்காக 43 வயது லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.
Seorang remaja perempuan berusia 15 tahun maut di tempat kejadian selepas motosikal ditungganginya merempuh treler di Melaka. Mangsa dikenali sebagai Nurnie Alisya. Pemandu treler berusia 43 tahun telah ditahan untuk siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *